நமது சிறு வயதில் மழைக்கு பள்ளி விடுமுறை என்றால் பள்ளிக்கு போய்தான் தெரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது டீவி இணையம் வந்ததும் இருந்த இடத்தில் தெரிந்து கொள்கிறோம். அப்போது வீட்டில் தொலைபேசி இருப்பது அபூர்வம்., இப்பொழுது மொபைல் இல்லாதவர்கள் அபூர்வம். பக்கத்து வீட்டிற்காக நம் வீட்டில் சேர்த்து சமைபோம்., இப்பொழுது நம் வீட்டில் சமைப்பதே பெரிதாக இருக்கு. இப்போதைய குழந்தைகளை நினைதால் நாம் குடுத்துவைத்தவர்கள். திண்ணை வைத்த வீடு., முற்றத்தில் ஊஞ்சல்., பக்கத்து வீட்டு சாப்பாடு., மண் பொம்மை, மழை விளையாட்டு., இனி இந்த பழைய நினைவுகளை நினைக்கதான் முடியும். வெறும் நினைவுகளாக...

உண்மைதான்
ReplyDelete