Tuesday 24 November 2015

மழை

நமது சிறு வயதில் மழைக்கு பள்ளி விடுமுறை என்றால் பள்ளிக்கு போய்தான் தெரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது டீவி இணையம்  வந்ததும் இருந்த இடத்தில் தெரிந்து கொள்கிறோம். அப்போது வீட்டில் தொலைபேசி  இருப்பது அபூர்வம்., இப்பொழுது மொபைல் இல்லாதவர்கள் அபூர்வம். பக்கத்து வீட்டிற்காக நம் வீட்டில் சேர்த்து  சமைபோம்., இப்பொழுது  நம் வீட்டில் சமைப்பதே பெரிதாக இருக்கு. இப்போதைய குழந்தைகளை நினைதால் நாம் குடுத்துவைத்தவர்கள். திண்ணை வைத்த வீடு., முற்றத்தில் ஊஞ்சல்., பக்கத்து வீட்டு சாப்பாடு., மண் பொம்மை, மழை விளையாட்டு., இனி இந்த பழைய நினைவுகளை நினைக்கதான் முடியும்.  வெறும் நினைவுகளாக...

Sunday 22 November 2015

No umbrella for chennai

Last two weeks chennai met heavy fever, cold and all infection. There is no correct doctor for chennai to cure it. Even there is no umbrella for chennai. Get well soon chennai.. We are waiting to come back..!

My crochet craft

This is crochet bag done by grannery square type

Tuesday 19 August 2014

cfl bulb உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்...?

 
சி.எப்.எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது. இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல் அசைவுகள், பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம்.

Sunday 17 August 2014

கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும்


ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?...கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும்ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு,தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும்அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்துநிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.